Posts

Showing posts from April, 2023

சிலப்பதிகாரம்

 சிலப்பதிகாரம் சங்க இலக்கியங்களாகிய தொகையும் பாட்டும் முறையே உதிரிப்பாடல்கள் என்ற மரபிலிருந்து வளர்ந்து நெடும்பாடல் களுக்கு வழிவகுத்தன. வாய்மொழிக்கதைகள் பழங் காலந்தொட்டு வழக்கத்திலிருந்தன. நாட்டியங்களுக்குப் புராணக் கதைக்கூறுகள் பொருளாக அமைந்தமையைச் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவி ஆடிய 11 வகைக் கூத்துக்களால் உணரமுடியும். ஆயினும் தொடக்க நிலையில் இப்புராணக் கதைக் கூறுகள் முழு வடிவம் பெற்றுக் காப்பியங்களாக உருவெடுக்கவில்லை தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமைக்குரியது சிலப்பதிகாரம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவப் பெற்றதால் இது முத்தமிழ்க் காப்பியம்; செய்யுளுக்கு நடுவே உரைநடை இடையிடையே விரவி வருவதால் உரையி டையிட்ட பாட்டுடைச் செய்யுள்; சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரையும், மூன்று நாடுகளையும் பரடுவதால் மூவேந்தர் காப்பியம்; அரசனையோ, ஆண்டவனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாமல் குடிமக்கள் கதையைக் கூறுவதால் குடிமக்கள் காப்பியம் எனப் பல சிறப்புக்களுக்குரியது சிலப்பதிகாரம் இந்நூலுக்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய பழைய உரையும் அடியார்க்குநல்லார் எழுதிய உரையும் கிடைக்கப் ப...