சிலப்பதிகாரம்

 சிலப்பதிகாரம்


சங்க இலக்கியங்களாகிய தொகையும் பாட்டும் முறையே உதிரிப்பாடல்கள் என்ற மரபிலிருந்து வளர்ந்து நெடும்பாடல் களுக்கு வழிவகுத்தன. வாய்மொழிக்கதைகள் பழங் காலந்தொட்டு வழக்கத்திலிருந்தன. நாட்டியங்களுக்குப் புராணக் கதைக்கூறுகள் பொருளாக அமைந்தமையைச் சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவி ஆடிய 11 வகைக் கூத்துக்களால் உணரமுடியும். ஆயினும் தொடக்க நிலையில் இப்புராணக் கதைக் கூறுகள் முழு வடிவம் பெற்றுக் காப்பியங்களாக உருவெடுக்கவில்லை தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமைக்குரியது சிலப்பதிகாரம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவப் பெற்றதால் இது முத்தமிழ்க் காப்பியம்; செய்யுளுக்கு நடுவே உரைநடை இடையிடையே விரவி வருவதால் உரையி டையிட்ட பாட்டுடைச் செய்யுள்; சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரையும், மூன்று நாடுகளையும் பரடுவதால் மூவேந்தர் காப்பியம்; அரசனையோ, ஆண்டவனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாமல் குடிமக்கள் கதையைக் கூறுவதால் குடிமக்கள் காப்பியம் எனப் பல சிறப்புக்களுக்குரியது சிலப்பதிகாரம் இந்நூலுக்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய பழைய உரையும் அடியார்க்குநல்லார் எழுதிய உரையும் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

காப்பியம் எழுந்த வரலாறு


சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணச்சென்ற போது குன்றக்குரவர். கண்ணகி தங்கள் கட்புலம் காணக் கோவலனுடன் விண்ணகம் சென்ற காட்சியை வியந்து கூறினர் உடனிருந்த சீத்தலைச்சாத்தனார் கண்ணகி கதையை அனைவரும் அறியக் கூறினார். 

நூலின் அமைப்பு


மூவேந்தரையும் பாடுகின்ற இக்காப்பியும் அவர்களி தலைநகரங்களிள் பெயர் கொண்ட காண்டங்கள் என்ற முப்பெரும் பிரிவுகளைடையது. காண்டங்கள் காதைகள் என்ற உட பிரிவுகளையுடையன புகார்க் காண்டத்தில் 19 காதைகளும், மதுரைக் காண்டத்தில் 13 காதைகளும், வஞ்சித் காண்டத்தில் 7 காதைகளும் அமைந்துள்ன மங்கள் வாழ்த்துக் காதையில் கண்ணர் கோவலனின் திருமண நிகழ்ச்சியில் தொடங்குகின்ற காப்பியம் தீதினா வடமீனின் திறம் கொண்ட கண்ணம். பத்தினித் தெய்வமாக வழிபடப்படும் வரந்தருகாதையுடன் நிறைவு பெறுகிறது.

கதைச்சுருக்கம்


மங்கலவாழ்த்துக் காதையில் கோவலன் - கண்ணகி திருமணம் நடைபெறுகிறது சில ஆண்டுகள் இல்வாழ்க்கை நடந்தபிறகு இந்திரவிழாவில் மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்ட கோவலன் அவள் மீது விடுதலறியா விருப்புக் 1008 கழஞ்சு பொன்னைக் கொடுத்து அவளைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறான். பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து மீண்டும் வந்த இந்திரவிழாவில் மாதவி ஆடிய நடனமும் அவள் பாடிய கானல்வரிப் பாடலும் கோவலன் மனம் மாறுபடக் காரணங்களாகின்றன. மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் என்று மாதவியைத் துறந்து கண்ணகியிடம் மீண்டு வருகிறான் குலம்தந்த வான் பொருளைத் தொலைத்த குற்றத்திற்காக நாணுகிறாள். கண்ணகியிடம் எஞ்சியிருந்த சிலம்புகளைக் கொண்டு வாழவழிதேடி மதுரை வருகின்றனர் கவுந்தியடிகள் வழித்துணையாகிறார் மாங்காட்டு மறையோள் வழிகாட்டு கிறான் கவுந்தியடிகள் இடைக்குல மங்கை மாதரியிடம் இவர்களை அடைக்கலமாகத் தருகிறார் பொற்கொல்லள் பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடியவன் அவளது சூழ்ச்சியால் சிலம்பு விற்க வந்த கோவலன் கொலைக்களப் படுகிறான் கண்ணகி பொங்கியெழுகிறாள் கதிரவனிடம் தன் கணவன் கள்வனா என்று நியாயம் கேட்கிறாள். மதுரை மாநகரில் பெண்டிரும், சான்றோரும் இல்லையா என்று அரற்றுகிறாள் தன் சிலம்பிள் உள்ளீடு மாணிக்கப்பரல் என்ற வாதத்தை முன் வைத்து பாண்டியன் அவையில் வழக்குரைத்து நீதியை நிலை நாட்டுகிறாள். வல்விளையால் வளைந்த செங்கோலைத் தன் உயிர் கொடுத்து நிமிர்த்துகிறாள். பாண்டியன் 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'. என்று பாண்டிமாதேவியும் உயிர் துறக்கிறாள் மதுரை மாநகரை எரியூட்டிய கண்ணகி மேற்றிசை வழி சேரநாட்டை யடைகிறாள் பதிளான்காம் நாள் வாளவளாவ கணவன்வந்து அழைத்துச் செல்ல விண்ணகம் ஏகுகின்றாள். மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவள் மலைவாழ் மக்கள் மூலம் செய்தியறிகின்றாள். தமிழரைப் பழித்த வடநாட்டு வேந்தர்களான களகவிசயரைப் போரில் வெல்லுகிறாள். இமயமலையில் கல்லெடுத்து, கங்கையில் நீராட்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுக்கிறான். பத்தினிக் கோட்டத்தில் வந்திருந்தவர்கள் கண்ணயை வாழ்த்த. அவள் அனைவருக்கும் நல்வரம் தருகின்றாள்.

காப்பிய மாந்தர்கள்


சிலம்பு பற்றி எழுந்த காப்பியமாதலின் சிலப்பதிகாரம் எனப்பட்டது. இக்கதை இலக்கியச்சுவை ததும்பும் வகையில் காப்பியமாகத் தீட்டப்பட்டுள்ளது கோவலன், கண்ணகி, மாதலி ஆகிய மூவரும் மையக் கதைப் பாத்திரங்களாக அமைகின்றன.இக்காப்பியத்தில் எதிர்நிலைத் தலைவனாக (Vilain) வாரும் இடம் பெறவில்லையென்பது காப்பியத்தின் தனிச்சிறப்பு பொற்கொல்லன் மதுரைக் காண்டத்தில் தோன்றி மறைகின்ற அளவிலேயே இடம் பெறுகிறான். மையமான திருப்பு முளைகளில் இளங்கோவடிகள், அவை குழ்வினை காரணமாக தடந்ததாகக் குறிப்பிடுகிறார். கானல்வரியில் ஏற்பட்ட பிரிவுக்கு யாழிசை யேல் வைத்து ஊழ்வினை உருந்து வந்தது என்கிறார் கண்ணகியும் மாதவியும் ஒருவரையொருவர் பழித்துப் பேசியதாக எங்கும் குறிப்பில்லை.

'மடம்படு சாயல் மாதவி தன்ளைக் கடம்படாஅளி' என்று மாதவியைக் குறை கூறாதவளாகக் கண்ணகி சித்திரிக்கப் படுகிறாள். கோவலனின் பண்புகள் மாடலமறையோனால் பாராட்டப்படுகின்றன.


நூலின் காலம்


(சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. இலங்கை வேந்தன் முதலாம் கயவாகு கண்ணகி வழிபாட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. இந்தக்கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தள் ஆண்ட காலம் கி.பி.213 முதல் கி.பி.125 வரை என்று மகாவமிசம் என்ற இலங்கை வரலாற்று நூல் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்ற நூற்றுவர் மகத நாட்டு சதகர்ணிகளைக் குறிக்கின்றது. முதலாம் சதகர்ணியிள் ஆட்சிக்காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு. இக்காரணங் களால் சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது தெளிவு.

Comments